Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

முதலில் காங்கிரஸ்…. இப்போ திமுக…. கூட்டணி ஆச்சி காலி… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என கூறி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற இருக்கும் நிலையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தலைமையிலான அரசு தான் ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முன்னதாக அவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜ்பவன் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது புதுவையில் உச்சகட்ட அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |