பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகில் உள்ள சமத்துவபுரத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். குமார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக குமாரை கடித்துள்ளது.
குமார் தனக்கு பாம்பு கடித்ததை வீட்டில் வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்களின் உதவியுடன் குமாருக்கு நல்லூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து அவரை திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.