புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லஷ்மி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருப்பது அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே புதுவையில் 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் கூட்டணியின் பலத்தை குறைத்துள்ளது.