அமெரிக்காவில் நடுவானத்தில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்து நகரம் முழுவதும் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் டென்வெர் விமான நிலையத்தில் இருந்து ஹொனோலுலுக்கு புறப்பட்ட united 328 விமானம் நடுவானில் எரிந்து சிதறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே வலது புறம் இஞ்சின் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் ப்ரூம் ஃபியில்ட் என்ற பகுதியிலுள்ள குடியிருப்புகளில் விழுந்தது. இதனால் உடனே டென்வெர் விமான நிலையத்திலேயே விமானத்தை தரையிறக்க செய்தனர் . மேலும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அனைவரையும் மீட்டதாக விமான நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
https://twitter.com/breakingavnews/status/1363231316423172096?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363231316423172096%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fusa%2F03%2F240165
ஹொனோலுலுக்கு பயணிக்க வேறொரு விமானம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திடீர் விபத்தின் காரணம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. எரிந்து சிதறிய விமான பாகங்களால் வீடுகள் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று போலீசார் கூறியுள்ளனர் .
https://twitter.com/breakingavnews/status/1363244681413484544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363244681413484544%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fusa%2F03%2F240165
விமான பாகங்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். வலது புறம் இன்ஜின் தீப்பற்றி எரிந்ததை பயணிகளில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.