Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இனிமேல் இதை தடுக்கணும்… மத்திய அரசின் ஆலோசனை கூட்டம்… வெளியிடப்பட்ட பயனுள்ள தகவல்கள்…!!

விபத்துக்கள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டமானது வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர். கடந்தவாரம் அச்சன்குளத்தில் இயங்கிவந்த மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 25 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து காக்கிவாடன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மற்றொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு வெடிவிபத்து ஏற்பட்ட இடங்களை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்துள்ளனர். இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிப்பது குறித்தும், விதிமுறைகளை மீறாமல் பட்டாசுகளை தயாரிக்க தொழிலாளர்களை வலியுறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் என்பவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசு அதிகாரி பாண்டே மத்திய அரசு சார்பில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிட்டுள்ளார். இதனை டான் பாமா கணேசன் பெற்றுள்ளார்.

Categories

Tech |