பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது .
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது . இதன் பின் நடிகை கரீனா கபூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கர்ப்பமானார். நேற்றிரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக நடிகர் சைப் அலி கான் தெரிவித்துள்ளார் . இரண்டாவதாக ஆண் குழந்தை பெற்றெடுத்த கரீனா கபூர்- சைப் அலிகான் தம்பதிக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.