Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவலர் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன..? திருச்சி அருகே நேர்ந்த சோகம்..!!

திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, காவல்காரன்பட்டி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த காவலர் மகாலிங்கம். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணமாக நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜீயாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவரை மாற்றலாகி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியற்றிவந்தார். இன்று காலை பணிக்கு வர வேண்டிய அவர் வரவில்லை. அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது காவலர் மகாலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காவலரின் தற்கொலையை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |