Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறுமியின் மனதைத் திருடிய திருடன்”… காதல் பிரிவால்…. 15 வயது சிறுமி செய்த காரியம்…!!

தேவகோட்டை அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்டுள்ள வாலிபரை காதலித்து வந்து சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் சீமான். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகன் மற்றும் 15 வயதில் மகளும் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சவர்ணம் கோயிலுக்கும், மகன் பள்ளிக்கும் சென்று விட்ட நிலையில் மகள் ரோஷினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ரோஷினி வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கோயிலுக்கு சென்றுவிட்டு வந்த பஞ்சவர்ணம் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இதுகுறித்து தேவகோட்டை போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரோஹினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. பஞ்சவர்ணம் இதற்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள சிறுகம்பை ஊரில் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்துள்ளார். அப்போது அறியாத மொழி கிராமத்தை சேர்ந்த திலீப் என்ற வாலிபன் அதே ஊரில் உள்ள அவன் சித்தி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது ரோஷினிக்கும், திலீப்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஒருநாள் ரோஷினி காணாமல் போகவே அவரை குறித்து பஞ்சவர்ணம் போலீசில் தகவல் அளித்தார். பின்னர் போலீசார் ரோஷினி திலீப்புடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி அதை கண்டு பிடித்தனர். பின்னர் மீட்டு அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து பஞ்சவர்ணம் மகன் மகளை அழைத்துக்கொண்டு தேவகோட்டை பகுதிக்குக் குடியேறினார்.

ரோஷினி மீண்டும் திலீபனுடன் சென்றுவிட்டார். மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு மகளிர் காப்பகத்தில் அடைத்துள்ளனர். ஆனால் மாணவியின் பள்ளிப்படிப்பை கருத்தில் கொண்டு சில நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காதலனை பிரிய முடியாமல் ரோஷினி சம்பவ தினத்தன்று தற்கொலை செய்து கொண்டாள். திலீபன் மீதும் ஏற்கனவே பல திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. காதலன் ஒரு திருடன் என்பதை தெரியாமல் காதலித்து, 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |