தமிழ்நாடு என வெறும் பெயர் தான் ஆனால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5% வட மாநிலத்தவர்களை நியமனம் செஞ்சிட்டு வருகிறார்கள். தொடர்ந்து அதுதான் நடந்துகிட்டு வருது. 2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல் துறை, என்.எல்.சி, பாரத மிகை மின் நிலையம், வருமான வரித்துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசுக்கு கீழே வரக்கூடிய பெரும்பாலான வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்கள் அதிகம் கிடைத்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெளிவா சொல்லுது.
தெற்கு ரயில்வேயில் அடிப்படை தொழிலுக்கான வேலை வாய்ப்புகளில் கூட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். நெய்வேலி நிறுவனத்தை உருவாக்க நிலம் கொடுத்தவர்கள், அதை சுற்றி உள்ள கிராமத்து மக்களுக்கு அதனால் வேலை கிடைக்கிறது இல்லை. வட மாநிலத்தினர் அதிகமாக வேலையில சேர்க்க படுறாங்க. சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சமீபத்துல 42பேரை தேர்வு செஞ்சாங்க. அதில் ஒருத்தர் கூட தமிழகத்தை சார்ந்தவர் இல்லை, இதுதான் தமிழ்நாடு. பேருலதான் தமிழ்நாடுன்னு இருக்கே தவிர, தமிழனுக்கு வேலை மறுக்க கூடிய நாடாக இது இருக்கு.
தமிழகத்துல படிச்ச பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துல காத்துக்கிட்டு இருக்காங்க. புதிய வேலை வாய்ப்புகளை மாநில அரசும் உருவாக்க வில்லை, மத்திய அரசு பணிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யல இதுதான் பழனிசாமினுடைய அரசாங்கம். திமுக அரசு புதிய வேலை வாய்ப்புகள நிச்சயம் உருவாக்கும், இது உறுதி என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.