Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே உஷார்! இதை செய்யாவிட்டால்…. உங்கள் பணத்திற்கு ஆபத்து…!!

கடந்த சில வருடங்களில் நாடு முழுதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமான முறையில் நடக்கிறது. சாதாரண மக்கள் பணத்தை திருடுவதற்காகவே ஒரு கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் சைபர் சைபர் கிரிமினல்கள் அட்ராசிட்டி அதிகமாக உள்ளது. சமீப காலமாக கொள்ளைகள் அதிகரித்துள்ளன. அதாவது இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் பணத்தின் மீது பாதுகாப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மோசடிகளை தவிர்ப்பது எப்படி?

போலி இமெயில் மூலம் உங்கள் தகவல்களை திருடி அதன் மூலம் பணத்தை திருட முயற்சிப்பார்கள். எனவே இதுபோன்ற இமெயில்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.

செல்போனில் Antivirus பயன்படுத்தலாம். பரிவர்த்தனை மோசடிகளை கண்டறியும் வசதி கொண்ட Antivirus செயலிகள் இருக்கின்றன அதை பயன்படுத்தலாம்.

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வேறு எங்கும் எழுதி வைக்கக்கூடாது. முக்கியமாக PIN Numberஐ எதிலும் எழுதி வைக்கக்கூடாது.

உங்கள் செல்போனுக்கு வரும் OTP Password-யை யாரிடமும் பகிரக்கூடாது.

இதில் தவறுகள் ஏதேனும் நடந்தால் மோசடி கும்பல்கள் உங்கள் மொத்த பணத்தையும் திருடிவிடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.

Categories

Tech |