ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி கிராமத்தில் முத்தப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவருடைய வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டை சந்தையில் விற்பனை செய்வதற்காக மேக்கலாம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் ஆடை கட்டி போட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஆடு திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆடு திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதில் பனந்தோப்பு கிராமத்தில் இருக்கும் சந்தோஷ் குமார் என்பவர் ஆடை திருடியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டை கைப்பற்றி முத்தப்பனிடம் ஒப்படைத்துள்ளனர்.