தமிழகத்தில் சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு
இந்நிலையில் எட்டாம் வகுப்பு ஹிந்தி பாடபுத்தகத்தில் திருவள்ளுவரை சாதி அடையாளத்துடன் வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதே போலவே அந்தப் படத்தை பாட புத்தகத்தில் இருந்து நீக்குவது உடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.