எஸ்பிஐ நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்பிஐ பேமன்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து “யோனோ மெர்சண்ட்” என்ற ஆப்பை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பெயருக்கு ஏற்றவாறு வர்த்தகர்களுக்கு பொருந்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இந்த இணையத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் இரண்டு கோடி வர்த்தகர்கள் இணைப்பதற்காக எஸ்பி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் இல்லாமல் இருக்கும் பகுதிகளில் மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தேவையான உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கு ஏற்றார்போல இந்த செயலி தற்போது அறிமுகமாகி உள்ளது. இந்த செயலுக்காக visa நிறுவனத்துடன் எஸ்பிஐ கூட்டணி அமைத்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்காக எஸ்பிஐ வங்கி உடன் கூட்டணி அமைத்தது மகிழ்ச்சி என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.