Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் நல்லது பண்ணிட்டாரு… தொகுதி தொகுதியா போறீங்க… மக்கள் கட்டம் கட்ட போறாங்க…!!

தமிழக மக்கள் உங்களுக்கு கட்டம் கட்டி உக்கார வச்சுருவாங்க என திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தி, ஊழல் பட்டியலை திமுக ஆளுநரிடம் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்னொரு நல்லது  திமுக தலைவர் ஸ்டாலின் பண்றாரு. என்ன பண்றார்ன்னா ? ஆர். ராஜாவை தொகுதி தொகுதி அனுப்புறாரு. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்மா அவர்கள் வெளிக்கொண்டு வந்து, 1லட்சத்தி 76ஆயிரம் கோடி திமுக ஊழல் பண்ணியதுனு சொல்லி கோர்ட்ல போயி,  திகார்  ஜெயில்ல  கம்பி எண்ணிட்டு உலகமே காரி துப்பி, இந்தியாவும் காரி துப்பி,  தமிழரின் மானமும் போச்சு.

வேட்டி கட்டிய தமிழன் மானம் டெல்லியில இருந்த நிலையில் தமிழுடைய மானமே  கப்பலிலேயே ஏற்றியவர்கள் இவர்கள். தமிழன் என்று சொல்லடா… தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்ன நிலை போய் ஆர்.ராஜாவால் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்று சொல்லுகின்ற அளவிற்கு 1லட்சத்தி 76ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செஞ்சுட்டு, அந்த ராஜாவை தொகுதி தொகுதியா அனுப்புறாரு. தொகுதி தொகுதியாய் அனுப்பும்போது மக்கள் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள் என்றால்  வா ராசா வா ?

இமாலயா  ஊழல் பண்ண ராசாவே வா ? மழை குலுங்கி மகாதேவனே வா ?  1 லட்சத்தி 76ஆயிரம் கோடி ஸ்வாகா பண்ணவரே வா ? இப்படி தான் ஒவ்வொரு தொகுதிளையும் வரவேற்பாங்க. இப்படி நல்லா ஞாபகம் படுத்துறாரு இப்போ. 1லட்சத்தி 76ஆயிரம்  கோடியை ஒவ்வொரு தொகுதிக்கு ஞாபகம் படுத்துறாரு. சொல்ல முடியாத அளவுக்கு தமிழ்நாட்டையே சுரண்டி,  பிழைத்து,  டெல்லியில் இருந்து கொள்ளை அடித்து, வளமாக்கி பெரிய அளவுக்கு… பல டிவிகளுக்கு  சொந்தக்காரர்கள், பல நிறுவனங்களுக்கு அதிபதி, இங்க மட்டுமில்ல அயல்நாடுகளுக்கு கூட பல முதலீடுகள். இவ்வளவு தூரம் பெரிய அளவுக்கு கொள்ளைக்கார கும்பலாக இருக்கின்றார்கள்.

வெளிப்படைத் தன்மையோட நடக்கின்ற ஒவ்வொரு டெண்டர்லையும் இந்த மாதிரி ஊழல்  இருப்பது என்று சொன்னால் நிச்சயமாக அந்த கோயபல்ஸ் பிரச்சாரம் என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுபடாது. எனவே ரெண்டாவது கட்டமா ? மூணாவது கட்டமா ? என  எத்தனை கட்டம் கொடுத்தாலும் சரி, தமிழ்நாட்டு மக்கள்  உங்களை கட்டடம் கட்டி ஓரமா உட்காரவச்சிருவாங்க, அது தான் நடக்க போகுது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |