அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
பேராசிரியர் மீதான புகார் குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதற்க்கு பல்கலைக்கழக நிர்வாகம் இதை விசாரிப்பதற்காக சிறப்பு குழு ஒன்றை அமைந்தது. இந்த குழுவின் விசாரணையில் பேராசிரியர் வரலா லஞ்சம் வாங்கியது கண்டு பிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பேராசிரியரை பணிநீக்கம் செய்வதாக உத்தரவிடது பல்கலைக்கழகம் .குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.