தமிழகத்தில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த பிறகு ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்க ‘பாஸ்டேக்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாஸ்டேக் முறையானது 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு ‘பாஸ்டேக் ‘ டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான கால அவகாசமும் அளிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமானது திடீரென்று 16ஆம் தேதி முதல்’ பாஸ்டேக் ‘முறையை கட்டாயமாக்கியது.
இதனால்’ பாஸ்டேக்’ முறைக்கு மாறாத வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ‘பாஸ்டேக்’ முறைக்கு மாற்றிக் கொண்டனர். 90 சதவீத வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக் ‘முறைக்கு மாற்றிக்கொண்டனர். ‘பாஸ்டேக்’ முறைக்கு மாற்றாத வாகன ஓட்டிகளுக்கு கூடுதலாக கட்டணம் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படுகிறது.நாடு முழுவதும் சுமார் 565 தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடிகள் அமைந்துள்ளன .இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் 102 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘பாஸ்டேக் ‘முறை அமலுக்கு வந்த பிறகு ரூபாய் 19 லட்சத்திற்கு வசூலாகிய நிலையில், தற்போது ரூபாய் 20 லட்சமாக அதிகரித்துள்ளது. சுங்க சாவடிகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறுவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளின், ஒரு நாள் வரி வசூல் மட்டும் ரூபாய் ஒரு கோடி அடைந்திருக்கும் என்று பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டிஜிட்டல் முனையான ‘பாஸ்டேக்’ வருவதற்குமுன் பல அரசியல் கட்சியினரும் அரசுப் பணியாளர்களும் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வரி கட்டாமல் சென்றுகொண்டிருந்தனர். தற்போது’ பாஸ்டேக் ‘ முறைக்குப் பின் அனைவரும் வரி செலுத்தாமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைதான் கட்டண வரி வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.