வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் கட்டளை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.
இந்நிலையில் தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கோபம் அடைந்தனர். இதனால் ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உடனடியாக கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வருகிற 23-ஆம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.