Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு…. இது தமிழகத்துக்கான ஒத்திகையே…. பாஜக மீது பாய்ந்த விசிக …!!

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு தமிழகத்திற்கான ஒத்திகையே என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, இன்று திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் நாகரிக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடத்தை புதுச்சேரி வாக்காளர்கள் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறோம்.

இந்தியா முழுவதும் ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து அனைத்து விதமான அநாகரிக வழிகளையும் பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத நிலையில் புதுச்சேரியிலும் அதே சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறது. மேலும் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து அரசியல்கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் பிரிவு படுத்துவார்கள் என்பதையும் புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையை என்பதையும் அறியமுடிகிறது.

 

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவின் நெருக்குதல் காரணமாக ஒருவர் பின் ஒருவராக அக்கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அதன் மூலம் புதுச்சேரி ஆட்சி இப்போது பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகும். புதுச்சேரி மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கும், தன்னலத்துடன் ஆட்சியைக் கவிழ்க்க துணைபோயுள்ள கட்சி மாறிகளுக்கும் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்.

அரசியல் கட்சிகள், கொள்கை பிடிப்பு இல்லாத தற்குறிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினால் என்னாகும் என்பதை உணர்ந்து இனி வரும் காலங்களில் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத பாஜக இப்படி பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காலூன்ற முற்படுவதை புதுச்சேரி மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இத்தகையவர்களுக்கும், ஜனநாயக விரோதிகளுக்கும் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தக்க பாடத்தை கற்பிப்பார்கள் என்று எச்சரிக்கை தெரிவித்துக் கொள்கிறோம் ” என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |