Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்கப்படுமா? “வைகோவின் வேட்பு மனு”இன்று பரிசீலனை..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர்  என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது.

Image result for vaiko

இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால்  அவர்களது  வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வைகோ மீது வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருப்பதால் அவரது  மனு ஏற்கப்படுமா? என்ற கேள்வியும் சட்ட சட்டசபை உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள  11ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைக்கே  இறுதி வேட்பாளர்கள்  பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |