பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கொரோனா ஆதரவு திட்டங்களை நீடிக்க நீதி வழங்குவதற்காக வணிகத்திற்கான வரியை அதிகரிக்க போவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா நிதி உதவிக்காக சுனக் அடுத்த மாதம் 3ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் கார்ப்ரேஷன் வரியை பவுண்டில் 19 பென்சிலிருந்து 23 பென்சாக உயர்த்தப்போவதாக சண்டே டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 12 பில்லியன் பவுண்டுகள் திரட்டப்படப்போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இலையுதிர் காலத்திலிருந்து வணிகத்திற்காக மசோதாவில் குறைந்தபட்சம் 1 பென்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் உயரும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
சுனக்கின் நெருங்கிய வட்டாரங்கள் கார்ப்பரேஷன் வரியை 23 % மேல் உயர்த்த மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளனர். வாட் வரிச்சலுகை திட்டம் மற்றும் வணிக ஆதரவு கடன்களுக்கு குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரை நிதி அளிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் பொருளாதார சரிவு 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை இந்த 2020 சந்தித்துள்ளதாக கூறுகிறது. மேலும் 2021 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 4% வரை பொருளாதாரம் சரியும் என்று பிரிட்டன் வங்கி தெரிவித்துள்ளது .