Categories
தேசிய செய்திகள்

உஷார்… விளையாட்டு விபரீதம்…. பப்ஜி கேம்மில் தொடங்கி பாலியலில் முடிந்த நட்பு… வசமாக மாட்டிக் கொண்ட இளம்பெண்…!!!

கேரளாவில் பப்ஜி கேம் மூலம் இளைஞரிடம் ஏமாந்து வங்கி மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பணிமுடிந்து வீட்டுக்கு சென்றவுடன் இரவு நேரத்தில் பப்ஜி கேம் விளையாடுவது வழக்கம். அந்த கேம் தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் இணைந்து ஆன்லைன் மூலமாக கேம் விளையாடி வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் நண்பர்களாகி செல்போன் மூலமாக பேசிக்கொண்டனர். இந்நிலையில் ஹரீஸ் என்ற இளைஞர் பேசிக்கொண்டிருந்த போது, நான் கோவைக்கு என் நண்பரை பார்க்க செல்கிறேன். நீயும் என்னுடன் வரவேண்டும் எனக் கூறி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

அவர் அந்தப் பெண்ணை வற்புறுத்தியதால் அந்த வாலிபருடன் அவர் சென்றுள்ளார். இருவரும் பேருந்து மூலமாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு சென்றனர். அங்கு விடுதி அறை ஒன்றில் இரண்டு நாட்களாக தங்கியிருந்தனர். அப்போது விடுதியில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையிலிருந்து கேரளா திரும்பிய பிறகு அந்த நபர் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும், தன்னை ஏமாற்றி விட்டதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Categories

Tech |