Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லாத்தையும் சமாளிக்க முடியல… விரக்தியில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் போன்றோர் இருக்கின்றனர். இவர் ஃபேன்ஸி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவேரிப்பட்டணம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |