முதல்வர் நாராயணசாமி நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் நாளை காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.