பிரிட்டனில் தொடர் கொலைகள் செய்த பெண்ணின் மகள் தன் தாயைப் பற்றி அறிந்ததும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த பெண் Joanna Dennihy என்பவர் நாட்டிலேயே வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவர் ஆவார். கடந்த 2013 ஆம் வருடத்தில் மூன்று பேரை பத்தே நாட்கள் இடைவெளியில் கொடூரமாக கத்தியால் குத்தி ரசித்து கொலை செய்திருக்கிறார். இதனால் சீரியல் கில்லர் என்று அழைக்கப்பட்ட இவர் கொலை செய்த பின்பு ஒவ்வொரு உடலையும் தனித்தனி குழியில் வீசி சென்றுள்ளார்.மேலும் இவரால் கத்திக்குத்து பட்ட இருவர் உயிர் பிழைத்திருக்கின்றனர்.
இதனால் தனிப்படை அமைத்து காவல்துறையினர் Joannaவை கைது செய்ததைத்தொடர்ந்து கடந்த 2014ம் வருடத்தில் இவருக்கு வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் Joanna விடம் விசாரணை மேற்கொண்டபோது கத்தியால் ஒருவரை குத்திக்கொலை செய்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மேலும் அது வேடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும் இச்சம்பவம் நடந்த போது Joannaவிற்கு Shianne Treanor என்ற ஐந்து வயது பெண் குழந்தை இருந்துள்ளது.
தற்போது Shianneவிற்கு 13 வயது ஆகிறது. இந்நிலையில் தன் தாய் செய்த கொடூர குற்றங்களை அறிந்த இவர் கீழே விழுந்து கதறி அழுததுடன் “தானும் தன் அம்மாவைப் போல ஆகி விடுவேனோ” என்று கேட்டுள்ளார். இதனால் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில தினங்களாகவே மனச்சோர்வு, பதற்றம் போன்ற மன நோய்களுக்கு உள்ளானார். இதனால் சில நாட்களில் நிச்சயம் தன் அம்மாவை போல ஆகி விடுவேன் என்று பயந்த Shianne தன்னால் யாரும் காயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். இதனால் தற்போது இவருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.