புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று வரை திமுக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், நியமன உறுப்பினர்கள் என 3 பேர் உள்ளனர். இதனால் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் நாளை முக்கிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.