மணல் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் என்ற ஊரைச் சேர்ந்த இருள்ராஜ் (வயது22), நல்லீஸ்வரன் (22), கருத்தாமலை (22), அழகர்சாமி (19), அரிகிருஷ்ணன் (23) ஆகிய 5 பேர் காரில் 25 மணல் மூடைகளை கடத்திச் சென்றுள்ளனர். அப்போது நடந்த வாகன சோதனையில் காரில் மணல் கடத்தியது சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து மணல் கடத்தியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.