தேனி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதையொட்டி தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் என்பவர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக நிதித்துறை இணை செயலாளர் கிருஷ்ணன் உண்ணி என்பவர் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசு முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.