கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால், குமாரசாமி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புனே நகருக்கு இடம் மாறி செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்பின் கோவாவிற்கு சென்றுவிடலாம் எனவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில் சபாநாயகர் 14 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ரத்து செய்ததது குறிப்பிடத்தக்கது.