Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து… இரு விமானிகள் உயிரிழப்பு…!!

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

14 ஆவது படைப் பிரிவை சேர்ந்த T-38  ரக விமானத்தில்  விமானிகள் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுமிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது.

இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை விமானப்படை வெளியிடவில்லை

Categories

Tech |