ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகிய பெண்ணை கேரளாவில் இருந்து கோவைக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் அடுத்த கொட்டாரக்கரா என்ற பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா. இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும்,இவருக்கும் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமையில் தங்கியுள்ளன.
அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கேரளா போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் கோவை என்பதால் கோவை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த விசாரணையை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது.