தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அவர்கள் நிலை என்ன என்பதே தெரியவில்லை.
இந்நிலையில் வேட்டைக்காரன் குலத்தை சேர்ந்த ஒருவர் அதிக வட்டி கேட்டால் அந்தப் பாட்டியும் பேத்தியும் கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதை கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் அவர்களை பிடித்து விசாரித்த போது பல உண்மைகள் வெளியானது. கொலையான பாட்டி அவர்களிடம் வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும். அதிக வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறினார். சம்பவ தினத்தன்று மீண்டும் வட்டி கேட்டு தொந்தரவு செய்ததால் வீட்டிற்கு வந்தால் தருமாறு கூறியுள்ளனர்.
இதனை தம்பி பாட்டி மற்றும் பேத்தி இருவரும் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி மத்தளம்பாறை அருகே முத்துமாலைபுரம் பகுதியில் வீசியதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சாக்கு மூட்டைகளில் பாட்டி மற்றும் பேத்தி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.