Categories
லைப் ஸ்டைல்

மூட்டு வலி பிரச்சனையால் அவதியா?… தினமும் இதை மட்டும் பண்ணுங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

தீராத மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை தினமும் செய்து வந்தால் போதும் மூட்டு வலி காணாமல் போய்விடும்.

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி தீரும். சீஸில் சத்து தரும் பாக்டீரியாவான புரோபையோடிக் அதிகம் உள்ளது. இந்த வகை பாக்டீரியா மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்ற நட்ஸ்களை தினசரி சாப்பிடலாம். எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை டீ குடிப்பது நல்ல பலன் தரும். இது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் மூட்டு அலர்ஜிகளை தடுக்கும். நுண் சத்துக்கள் நிறைந்த எள்ளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது மூட்டு வலியையும் வீக்கத்தையும் குறைக்கும். மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப் பட்டை ஆகியவை மூட்டு அலர்ஜியைத் தடுக்கும். செர்ரி பழங்கள், மீன், ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசி போன்றவை மூட்டுக்கு நலம் தரும் உணவுகள்.

Categories

Tech |