Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களை கண்கலங்க வைத்த வடிவேலு… வேதனை தரும் செய்தி…!!!

நடிகர் வடிவேலு தனக்கு நடிக்க வாய்ப்பில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் வடிவேலு. அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். அவரின் பெயரை சொன்னாலே அவரின் நகைச்சுவை மட்டுமே அனைவர் மனதிலும் வரும். அவருக்கு பல்வேறு பேரும் புகழும் உண்டு. அதில் வைகைப்புயல் வடிவேலு என்பது மிக சிறந்தது. அப்படிப்பட்ட பல்வேறு புகழுக்கு உரியவர் நீண்ட நாட்களாக திரையுலகில் வரவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பழைய வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் மூலமாகவே அவரது ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் தன் நகைச்சுவை மூலம் இன்றும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகர் வடிவேலு தனது நடிக்க வாய்ப்பில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க ஆசையாக இருக்கிறது, உடலிலும் தெம்பு இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்பு வழங்கவில்லை. நான் பத்து வருடமாக டவுனில் இருக்கிறேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |