கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கொடுத்து திமுகவின் பீ டீம் ஆக அதிமுக உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசைப் பொறுத்த வரையில் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என இருக்கு. ஒரு விஷயம் நீதித்துறைக்கு போய், நீதித்துறை அனுமதி வழங்கி வழிகாட்டல் கொடுத்தா அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்யணும். அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அந்த வகையில் மதுரையில் கருணாநிதிக்கு சிலை திறக்க அரசு அனுமதி கொடுக்கப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மாவின் உணர்வு எங்கள் ரத்தத்தில் ஓடுகிறது. அதனால எந்த நிலையிலும் திமுக பீ டீம் ஆக இருக்க மாட்டோம். எங்க தலைவர் அடையாளம் காட்டினது, தமிழ்நாட்டினுடைய தீய சக்தி திமுக. தமிழ்நாட்டினுடைய தீயவர்கள், ஊழல் பெருச்சாளிகள் திமுக. எனவே திமுகவை எந்த நிலையிலும் தலை தூக்க விடக்கூடாது என்பது தான் தலைவருடைய கொள்கை, அம்மாவுடைய கொள்கை. அந்த அடிப்படை தான் அம்மாவும் அவ்வளவு கால ஆண்டுகள் ஆட்சி செஞ்சாங்க. அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் ஆட்சி செய்தாங்க.
இது எங்க ரத்தத்தில் ஊறுனது. இவர்களை போல ஒரு கள்ள உறவு வைத்துக்கொள்பவர்கள் நாங்களே இல்ல. திருட்டுத்தனமா போய் சந்திக்கிறது, அவங்களோட டில் வச்சிக்கிறது, நாங்க வரக்கூடாதுன்னு இரண்டு பேருமே கூட்டு சதி பண்ணுறது, பணப்பரிமாற்றம் பண்றது இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எங்களை பொறுத்தவரையில் நாங்க தான் எ டீம் , எ டீம் தான் ADMK டீம் என அமைச்சர் டிடிவி தினகரனை கடுமையாக சாடினார்.