Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறப்பிலும் இணைபிரியா தம்பதி… எதிர்பாராத மரணம்… பெரும் சோகம்…!!!

பெருந்துறை அருகே கணவர் இறந்த செய்தியை கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள முள்ளம்பட்டி பகுதியில் பழனிசாமி மற்றும் முத்தாயம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். அதனால் கணவன் மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாணிக்கம் கண்ணம்பாளையத்தில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் அங்கேயே இறந்து விட்டார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் அவர் இறந்தது யாருக்கும் தெரியவில்லை. மாலை நேரம் அப்பகுதி வழியாக சென்ற சிலர் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணியம் என்பவருக்கு தகவல் அளித்தனர். அவர் உடனே பழனிசாமி மனைவியிடம் தகவலை கூறினார். அந்தச் செய்தியைக் கேட்டதும் உடனே மயங்கி விழுந்த முத்தாயம்மாள் அங்கேயே உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |