Categories
தேசிய செய்திகள்

இவருக்கா இந்த நிலைமை?…. 25 ஆயிரம் ஆதரவற்ற உடல்கள் அடக்கம் செய்த… முதியவரின் பரிதாப நிலை…!!?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சேவை செய்த முதியவர் மிக பரிதாப நிலையில் உள்ளார்.

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த முதியவர் முகமது ஹெரிப் 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட அவர்களில் அவரும் ஒருவர். சைக்கிள் மெக்கானிக்கான இவர், கடந்த 20 ஆண்டுகளில் அயோத்தியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற அவர்களின் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்த சேவைக்காக இவருக்கு விருது அளிக்கப்பட்டது. தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு ம வறுமையிலும் இருக்கிறார்.

அவரிடம் மருந்து வாங்கக் கூட பணம் இல்லாத நிலையில் உள்ளார். பத்மஸ்ரீ விருதுக்கு அளிக்கப்படும் தொகைக்காக காத்திருக்கிறார். பலருக்கும் சேவை செய்து உதவிய இவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Categories

Tech |