மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம் மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது.
மாருதி சுசூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே தொடர்ந்து மாருதி சுசூகியின் வாகன உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது. வாகன உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் மட்டுமல்லாது முன்னணியில் நிறுவனங்களாக இருக்கும் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்க குறைத்து வருகிறது.