Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில்… இன்று முதல் 3 நாட்களுக்கு… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்.

இன்று முதல் 25ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |