Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திமுக பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க… இந்த தடவ அது செல்லாது… முதல்வரின் பேச்சால் பரபரப்பில் கரூர்…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொய் பேசியே ஆட்சிக்கு வந்துள்ளார் இந்த முறை அது நடக்காது என கரூர் பிரச்சாரத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது “திமுக பொய் சொல்லிதான் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அது செல்லாது. கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்கள் எல்லாம் என்ன ஆனது ? அதிமுக மீது எவ்வளவு குற்றம் சாட்டினாலும் நாங்கள் அதைப் பொய்யென்று நிருபனம் செய்வோம்.

மேலும் திமுக ஆட்சியில் இருந்தபோது 220 அரசு டெண்டர்கள் அனைத்தும் ஒருவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை என்பது மக்குளுக்கே தெரியும். நான் முதல்வர் என்று எப்போதும் நினைக்கவில்லை. மக்கள்தான் முதல்வர் மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் கட்சிதான் அதிமுக” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |