புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தனது ஆதரவாளர்களோடு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரி சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற இருக்கின்றது. எனவே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் ஆதரவு எம்எல்ஏகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை செய்து வருகின்றார்.
ஏற்கனவே நேற்றைய தினம் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை செய்த முதலமைச்சர் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனை முடித்து வெளியே வந்த முதல்வரிடம் இதுகுறித்து கேட்டபோது சட்டமன்றத்தில் அடுத்தகட்ட விவரங்கள் குறித்து தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.