Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி போராட்டம் “பெருமைபடலாம்” வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து…!!

இந்திய அணி போரடியாயத்தை நினைத்து பெருமைபடலாம் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

Image result for VVS லட்சுமண்

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , தோனியும் , ரவீந்திர ஜடேஜாவும் அற்புதமாக போராடி இந்தியாவை இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். அடுத்தடுத்து இரண்டாவது முறையாக  உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்ததற்காக நியூஸிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். என்று ட்வீட் செய்துள்ளார்.

அதே போல அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்_டில் , இந்த உலக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு அற்புதமாக இருந்தது. இதில் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள், அவர்கள் போராடிய விதம் குறித்து மிகவும் பெருமைப்படலாம். இந்திய அணிக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |