புதுவை சட்டப்பேரவையில் தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகின்றார். அதில், கொரோனா காலத்தில் அரசு செய்த பணி பாராட்டுக்குரியது. புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் சில தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமை எங்கள் அரசுக்கு உண்டு.கண்டனத்தை என்.ஆர் காங்கிரஸ் அரசின் விட்டு சென்ற பணிகள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றினோம்.
பல்வேறு திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்தார். கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. 4ஆண்டுகளாக எங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளன. காங்கிரஸ் அரசு கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு தொற்றை கட்டுப்படுத்தியது.
மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95% நிறைவேற்றி முடித்திருக்கிறோம். கொரோனா காலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மக்களுக்காக சேவையாற்றினார். மாநிலத்தின் வருமானத்தை குறைக்க வேண்டுமென்று சதித்திட்டம் தீட்டினார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்ட அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார்கள். எவ்வளவு இக்கட்டு வந்தாலும் புதுச்சேரி மக்களுக்காக இரவு பகல் பாராமல் போராடினோம் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் பேசினார்.