Categories
தேசிய செய்திகள்

“பாஸ்டேக்” அமல்…. ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்…. தமிழக வரலாற்று சாதனை…!!

பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகளிலும் ஒரே நாளில் ரூ. 1 கோடி வரை வசூலித்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் கட்டாயம் என்ற திட்டம் கடந்த 16 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஸ்டேக் பெறாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்  வசூலாகி வந்துள்ளன.

தமிழகத்தில் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேல் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த பிறகு அதிகமாக கட்டணம் வசூலாகி உள்ளன. இதனால் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளிலும் ஒரு நாள் வசூல் ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என சுங்கச்சாவடி மேலாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |