மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக புனே மாவட்டத்தில் அதிகரித்துவரும் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் அனைத்தும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை தெருக்களில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் ஹோட்டல்களை இரவு 11 மணிக்கு மூட ஆணையிட்டுள்ளது.