Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் எப்போது கிடைக்கும்…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்…!!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கு பதிலாக  ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப் படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டடிபாளையத்தில் நலத்திட்ட விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கியது போன்று, ஷு மற்றும் சாக்ஸ்  இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார். மேலும் பயிர் கடன் தள்ளுபடி தேர்தலுக்கு முன்பே செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் குழு கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |