Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைக்கப்பட்டது மெட்ரோ ரயில் கட்டணம்…. இன்று முதல் அமல்…. பயணிகள் கொண்டாட்டம்…!!

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை வெளியிட்டது.

கொரோன  பரவலின் காரணமாக ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நோய் பரவல் சிறிது கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அதில் சில தளர்வுகளை ஏற்படுத்தி ரயில் சேவை மீண்டும் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் பயணித்து வந்துகொண்டிருக்கின்றனர். பயணிகளின் அதிகபட்ச கட்டணமாக ரூபாய் 70 வரை வசூலிக்கப்பட்டு வந்திருந்த நிலையில் இதனைக் குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதிகபட்சமாக இருந்த ரூபாய் 70 கட்டணம் தற்போது ரூபாய் 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறை பிப்ரவரி 22 முதல் அமலுக்கு வந்தது. மேலும் டிக்கட்டுகளை பயண அட்டைகளின் மூலமாக பெறுபவர்களுக்கு 10%, கியூ ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20% தள்ளுபடி வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |