Categories
லைப் ஸ்டைல்

உஷார்! இந்த பிரச்சினை இருந்தால்…. புற்றுநோய் இருக்குனு அர்த்தம்…. உடனே மருத்துவரை பாருங்க…!!

வயிறு வலி என்பது மட்டுமே வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் கிடையாது. சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகள் கூட அதனுடைய அறிகுறிகளாக இருக்கலாம். எனவே கவனமுடன் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

ஒருவர் மலம் கழிக்கும்போது ரத்தம் ரத்தம் வந்தாலோ அல்லது ரத்த வாந்தி எடுத்தாலோ அது புற்று நோயின் முதல் அறிகுறி ஆகும்.

பசியின்மை கூட வயிற்று புற்றுநோய் அறிகுறிகளில் ஒன்று.

மேலும் அதிகம் எதுவும் சாப்பிடாமல் வயிறு பசிக்காமல், வயிறு நிறைந்திருப்பது போல் உணர்ந்தால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.

அடிக்கடி கடுமையான வயிறு வலி ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். ஏனெனில் அதுவும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

தினமும் எந்த ஒரு டயட்டில் இல்லாமல் உடல் எடை குறைந்து கொண்டே சென்றால் அதை சாதாரணமாக நினைக்கக்கூடாது. திடீர் உடல் எடை குறைவு வயிற்று புற்று நோயின் ஒரு அறிகுறி ஆகும்.

அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அது வயிற்று புற்று நோயின் அறிகுறிகள்.

வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்தால் வயிறு உப்புசம் வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

Categories

Tech |