பெண் ஒருவர் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ள வாரி ஓடை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தின்போது ராஜ்குமார் என்ற இளைஞர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை தேடி வந்தபோது அவருடைய இரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து முதற்கட்ட விசாரணையில், “ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஹசீனா பேகம்(35) என்பதும், அவருடைய குடும்பத்தாருடன் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து புதுவையில் பெய்த திடீர் மழை காரணமாக பெண் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.