Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்… அம்மா மினி கிளினிக்… விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முக தேர்வு…!!

அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கிளினிக்கில் பணிபுரிவதற்காக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் உதவி நர்சுகள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளது. அதற்கான நேர்முகத் தேர்வு நேற்றுமுன்தினம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கலையரங்கில் வைத்து நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான நர்சுகள் முகமூடி அணிந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர் அவர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் நேர்முகத் தேர்வை நடத்தியுள்ளனர். அதன் பின் அவர்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு பணியும்  நடந்துள்ளது.

Categories

Tech |