அமெரிக்காவில் கணவரிடம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மனைவி சொன்ன போது எடுக்கபட்ட வீடியோ தற்போது பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள அரிஸோனாவை சேர்ந்த ஹெய்லி பேஸ் என்பவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் வாய்ந்தவர். இவர் தான் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ளும் சிப் மூலம் வீட்டில் சோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.
இந்த சந்தோசமான விஷயத்தை அவர் தனது கணவரிடம் சாதாரணமாக சொல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்போது அங்கு நடந்த அனைத்தையும் ஒரு வீடியோவாக எடுத்து தனது யூடியூப் மற்றும் டிக் டாக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த காட்சி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் தனது கணவரிடம் சுரண்டல் லாட்டரி ஒன்றைக் கொடுத்து அதை தேய்க்கும் படி கூறியுள்ளார்.
அதை தேய்த்ததில் பேபி என்ற வார்த்தை இருந்துள்ளது. அதன்பின் தன் மனைவியின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை பார்த்த கணவர் தான் அப்பாவாக போவதை உணர்ந்து கொண்டார். அதன்பின் ஆனந்த கூக்குரலிட்டு தன் மனைவியை கட்டி அணைத்தார். இந்த வீடியோ பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.